Wednesday, 12 February 2020

தாயகம் நோக்கி நிகழ்வு 11.02.2020 - பகுதி இரண்டு








தோழர்.டி.கோபாலகிருஷ்ணன்…
நான் 1966ல் பணியில் சேர்ந்தேன். 1984ல் தந்திப் பகுதி மூன்றின் தமிழ் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டேன். 1966 முதல் 1984 வரை தஞ்சாவூரில் பணியாற்றினேன். ஒழுக்கத்தை நான் தந்திப் பகுதியில் பணி புரியும் போது தான் கற்றுக் கொண்டேன்.
      டெலிகிராப்மேனுக்கு போஸ்ட்மேனுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டுமென ஊதியக் குழுவிடம் கேட்ட போது போஸ்ட்மேன் பணப் பரிவர்த்தனைப் பணிகளில் ஈடுபடுகிறார்…ஆனால் டெலிகிராப் மேன் பணப் பரிவர்த்தனைப் பணிகளில் ஈடுபடுவத்திலை என்பதால் கொடுக்க முடியாது என்று சொன்னார்கள். எனவே தந்திப் பகுதியில் Electronic Money Transfer (E.M.T) எனப்படும் மணியார்டர் சேவையினை உள் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தினோம். 5வது ஊதியக் குழு முன் டெலிகிராப்மேனுக்கு போஸ்ட்மேனுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டுமென கோரிக்கையினை மீண்டும் எழுப்பினோம். இம்முறை நாம் வென்றோம். டெலிகிராப்மேன் தோழர்கள் போஸ்ட்மேனுக்கு இணையான ஊதியம் பெற்றார்கள்.
      விருப்ப ஓய்வு கொடுக்க வேண்டாம் என்று சங்கங்கள் சொன்ன பிறகும் 78,500 ஊழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றிருக்கிறார்கள் என்றால் அது எதைக் காட்டுகிறது…? C.C.A அலுவலகத்திற்கு விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம் செல்வதில் பெரும் தேக்க நிலை நீடிக்கிற்து. 8700 ஊழியர்களில் 1300 ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம் மட்டுமே நேற்று வரை சென்றிருக்கிறது. பணி நிறைவு பெற்றுச் சென்றவர்களுக்கு மட்டுமே புரவிஷனல் பென்ஷன் கொடுக்கலாம் என்ற விதிமுறை இருக்கிறது. எனவே அட்ஹாக் பென்ஷன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கு ஒரு ஓய்வூதியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எப்படியாயினும் இது தொடர்பாக உத்திரவு விரைவில் டெல்லியிலிருந்து வெளியாகும் என்று உறுதியாக நம்புகிறோம்.
      விருப்ப ஓய்வு தொடர்பாக மத்திய அரசு முறையான உத்திரவாதத்தை எழுத்து வடிவில் கொடுத்திருக்கிறது. அதனை நீங்கள் அனைவரும் கண்டிப்பாக படித்திருப்பீர்கள். திருத்தப்பட்ட பட்ஜெட் எஸ்டிமேட் பாராளுமன்ற துணைக் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே சற்று தாமதாமானாலும் அரசின் உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்புகிறோம்….

தாயகம் நோக்கி....













சென்னையில் விருப்ப ஓய்வு பெற்ற தந்தி ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற தாயகம் நோக்கி கூடல் விழாவில் (11.02.2020)
தோழர்.பி.எஸ்.ராமன்குட்டி அவர்கள் பேச்சின் சாராம்சம்...
"தந்தி ஊழியர்கள் மூன்றாம் பிரிவின் பொதுச் செயலாளராக பாலக்காட்டில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் நான் பொதுச் செயலாளராக 1987ல் தேர்வு செய்யப்பட்டேன். எனக்காக தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பினை எனக்காக தோழர்.டி.எஸ்.ராஜன் அவர்கள் விட்டுக் கொடுத்தார். எனது பணிக்கு தமிழ்நாடு மாநில தந்தி மூன்றாம் பிரிவு ஊழியர்கள் செய்த தியாகங்களை என்னால் மறக்க முடியாது. என்னுடன் தோழர்.டி.எஸ்.ராஜன் அவர்கள் 30 நாட்கள் டெல்லியிலேயே தங்கியிருந்து எனக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தார். டெலிகிராப் மேனுக்கு போஸ்ட் மேனுக்கு இணையான ஊதியம் பெற்றுத் தந்தமைக்காக பிப்ரவரி 1998ல் அகில இந்திய சங்க அலுவலகத்துக்கு தமிழ் மாநில தந்திப் பகுதிச் சங்கங்கள் புத்ய பேக்ஸ் மெஷின் வாங்கிக் கொடுத்தனர். அதே மாதம் 1998ல் மத்திய சங்கத்துக்கு தமிழ் மாநிலச் சங்ககங்கள் கம்ப்யூட்டர் வழங்கின. கம்ப்யூட்டர் வசதி கொண்ட முதல் தொலைத் தொடர்புச் சங்கம் என்ற பெருமையினை நமது சங்கம் தட்டிச் சென்றது. என்னுடைய ஆயுதம் அர்ப்பணிப்பு உணர்வும், நேர்மையும் தான். நான் 500 தோழர்களுடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன். தந்திப் பகுதி மூன்றாம் பிரிவு ஊழியர்களின் தலைவர் திரு.ஹர்சுல்கார் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி காலமானார். அச்செய்தியினைக் கேட்ட அவரது துணைவியாரும் 24 மணி நேரத்தில் காலமானார். நான் சிறிய வயதில் கன்றுக் குட்டியை தொழுவத்திற்க்கு கொண்டு சென்ற போது நாய் கடித்ததில் வெறிநாய்க் கடி நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டேன். அருகாமையில் மருத்துவமனை ஏதுவும் இல்லை. போக்குவரத்து வசதியும் இல்லை. நான் நாட்டு மருந்து சாப்பிடு நாயைப் போலக் கத்தியிருக்கிறேன். என் குடும்பத்தினர் மிகவும் பயந்து போய்விட்டார்கள். நான் பிழைத்தேன். எனக்கு அது முதல் மறு பிறவி...
               இரண்டாவதாக டெல்லியில் பணிபுரியும் போது சிக்கன்பாக்ஸ் நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் கிடந்தேன். நமது நம்பிக்கைக்குரிய ஒரு தலைவர் என்னை வந்து பார்த்து விட்டு எங்கே தனக்கு அந்த நோய் வந்து விடுமோ என்று பயந்து சொல்லாமல் கொள்ளாமல் போய் விட்டார். எப்போது என்னை அருகிலிருந்து 12 நாட்களுக்கும் மேலாக பார்த்துக் கொண்டவர் தோழர்.சித்துசிங். 1991ல் கல்கத்தாவுக்கு அருகிலிருக்கும் டார்ஜிலிங்க் பகுதியில் கூர்க்காலாந்து பகுதியில் மிகத் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு வசிக்கும் மக்கள் ஏனைய பகுதியில் வசிப்போர்களை இந்தியர்கள் என்று கூறி புறக்கணித்தார்கள். தபால் சேவை எதுவும் கிடையாது. டெல்லி அவர்கள் இந்தியாவின் பகுதி. அவர்கள் கூர்க்காலாந்து என்று பிரிவினைபோராட்டம் நடத்தி கொண்டிருந்தார்கள். நமது சங்க இதழான டெலிகிராப் குருசேஷடரை அங்குள்ள நமது உறுப்பினர்களுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லை. எப்படி சங்க இதழை கொண்டு சேர்ப்பது என்று கல்கத்தாவில் கூடி யோசித்தோம். மளிகை சாமான் கொண்டு செல்ல கூர்க்கா தீவிரவாதிகள் தடை சொல்வதில்லை என்பதால் மளிகை சாமான் கொண்டு செல்லும் நமது ஊழியரின் உறவினர் லாரி மூலமாக சங்க இதழை அனுப்பி வைத்தோம்.
      பஞ்சாப்பில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்த காலத்தில் சிவப்புக் கொடியைக் கண்டாலே போராட்டக்காராகள் தகராறு செய்த காலத்தில் துணிந்து லூதியானாவில் நமது மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினோம். மாநாடு தொடங்கும் போது மட்டும் கொடியேந்தி கோஷம் போட்டோம். நான் டெல்லி திரும்பிய பிறகு தோழர்.ஹர்கிஷன்சிங் சுர்ஜித் (அப்போதைய சி.பி.ஐ.எம். பொதுச் செயலாளர்) என்னை கட்சி அலுவலகத்திற்கு அழைத்து கை குலுக்கி எப்படி பஞ்சாபில் மாநாட் நடத்தினீர்கள் என்று கேட்டு பாராட்டினார்.
      “தந்திப்பகுதியினைச் சேர்ந்த நாம் நாளை செய்யலாம் என்று எந்த வேலையையும் ஒத்தி வைப்பதில்லை. தந்தி ஊழியர்கள் நேர்மை, நேரந்தவறாமை ஆகியவற்றிற்கு நல்ல உதாரணம் என்று ஆணித்தரமாகச் சொல்லலாம். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு உதாரணம் சொல்வார்கள். ஒரு தந்தி ஊழியர் வீட்டில் உள்ள ஒரு பூச்செடியில் தினமும் காலை சரியாக 4 மணிக்குப் பூக்குமாம். அதற்கு அடுத்த வீட்டில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் இருந்தாராம். அவர் வீட்டிலும் அதே பூச்செடி இருந்ததாம். ஆனால் அங்கு அது காலை 5 மணிக்குத் தான் பூக்குமாம்…”
      கேரளாவில் நமது தந்திப் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஊழியர்கள் ஆண்டுக்கு 3 முறை கூடுகிறோம். ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 ஆகியவையே அந்த தினங்கள். தனது நூறாவது அகவையை வருகிற ஜூன் 28 அன்று நிறைவு செய்யும் ஓய்வு பெற்ற ஊழியரை கெள்ரவிக்கப் போகிறோம்…
      “நான் வெறும் உடலாக மாறும் முன் இந்த சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.. நீங்களும் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்யுங்கள். ஓய்வாக இருக்க வேண்டுமென எண்ணாதீர்கள்….”

Thursday, 28 September 2017

திரு.இரா.இராஜேந்திரன் - பி.எஸ்.என்.எல் புதுச்சேரி பணி ஓய்வு

அன்பு நண்பர் திரு.இரா.இராஜேந்திரன் – பி.எஸ்.என்.எல் புதுச்சேரி பணி ஓய்வு.
      என் அன்பிற்கினிய நண்பர் திரு.இரா.இராஜேந்திரன் (பி.எஸ்.என்.எல்-புதுச்சேரி) வருகிற 30.09.2017 அன்று பணி ஓய்வு பெறுகிறார்.
      இவரது தந்தையார் திரு.இராமசாமி சீர்காழி தாலுக்காவில் உள்ள திருவெண்காட்டில் விவசாயம் செய்து வந்தார். இவரது தாயார் திருமதி.ஜெகதம்.
      திரு.இரா.இராஜேந்திரன், நாகை மாவட்டம், சீர்காழி தாலூக்கா, திருவெண்காட்டில் 18.09.1957-ல் பிறந்தார். இவரது தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி திருவெண்காட்டில் கடந்தது. பின்னர் (பூம்புகார்) மேலையூரில் அமைந்துள்ள பூம்புகார் பேரவைக் கல்லூரியில் பி.யூ.சி. மற்றும் பி.ஏ (தத்துவம்) படித்து முடித்தார். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (தத்துவம்) பயின்றார். அதன் பின்னர் இந்திய அரசின் தொலைத் தொடர்புத் துறையில் 11.01.1983 அன்று பணியில் சேர்ந்தார்.
      இவருக்கு இரண்டு பெண்கள். மூத்தவர் செல்வி.சங்கீதா பி.டெக் படித்து விட்டு இன்போசிஸில் சென்னையில் பணி புரிகிறார். இளைய மகள் செல்வி.ஷீலாப்ரியா பி.டெக் படித்து விட்டு பெங்களூரிலுள்ள டெக்மஹிந்திராவில் பணி புரிகிறார். இவர் மொத்தம் 34 ஆண்டுகள் தொலைத்தொடர்புத் துறையில் பணியாற்றியுள்ளார். கொடுக்கப்பட்ட பணியினை செய்து முடிக்கும் வரையில் ஓய மாட்டார்.
      திரு.இரா.இரஜேந்திரன் அவர்களின் துணைவியார் திருமதி.கனிவதனா புதுச்சேரி அரசின் டைரக்டரேட் ஆப் அக்கவுண்ட்ஸ் அண்ட் ட்ரசரீஸ்-யில் அஸிஸ்டெண்ட்டாக பணி புரிந்து வருகிறார்.

      பலதருணங்களில் நிலைமை அறிந்து உதவி செய்யும் நல்ல உள்ளம் கொண்டவர். இவரது பணி ஓய்வுக் காலம் சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்.