Thursday, 27 October 2016

பி.எஸ்.என்.எல் டவர்களை தனி கார்ப்பரேசன் அமைக்கும் திட்டம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கீழ் உள்ள 60 ஆயிரம் செல்போன் டவர்களைத் தனியே பிரித்து ஒரு கார்ப்பரேஷன் அமைக்க மத்திய அரசு முயல்கிறது. அதனைக் கண்டித்து இந்தியாவில் உள்ள அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் இன்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்





Friday, 7 October 2016

சென்னை காண்டிராக் ஊழியர்கள் பணி நீக்கத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னையில் பணிபுரியும் காண்டிராக்ட் ஊழியர்கள் 11 பேரை சென்னை பி.எஸ்.என்.எல் நிர்வாகம் வேலை நீக்கம் செய்த்துல்லது. இதனைக் கண்டித்து இன்று 07.10.2016 புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





Thursday, 25 August 2016

25.8.16 பி.எஸ்.என்.எல் புதுச்சேரி சேமநலநிதி கூட்ட முடிவுகள்


புதுச்சேரி பி.எஸ்.என்.எல் ஊழியர் சேமநல நிதி கூட்டம் – 25.08.2016 முடிவுகள்

            புதுச்சேரி பி.எஸ்.என்.எல் ஊழியர் சேமநல நிதி கூட்டம் இன்று  25.08.2016 மதியம் 3 மணி முதல் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு :
(1)  ஊழியர்களுக்கு வழங்கப்படும் திருமணக் கடன் ரூ.50,000/-ஆக உடனடியாக உயர்த்தப்படுகிறது ;

(2)  உள்ளூரில் ஒரு மருத்துவமனையை ஊழியர்கள் மருத்துவம் பார்ப்பதற்கு ஏதுவாக பட்டியலில் இணைத்திட நடவடிக்கை எடுக்கப்படும் (நல்லாம் (அ) ஏ.ஜி.பத்மாவதி (அ) நியூ மெடிக்கல் செண்டர்) ; ஒவ்வொரு 6 மாதமும் பட்டியலில் உள்ள மருத்துவமனைகள் பற்றிய விவரம் ஊழியர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் அலுவலக அறிவிப்புப் பலகையின் மூலம் தெரிவிக்கப்படும் ;

(3)  மெடிக்கல் செக் அப் செய்து கொள்வதற்கு ஊழியர்களிடம் இருந்து மனுக்கள் கோரப்படும் ; பணி மூப்பு அடிப்படையில் இந்த ஆண்டு மட்டும் 20 ஊழியர்கள் மெடிக்கல் செக் அப் செய்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் ; மெடிக்கல் செக் அப் செய்து கொண்ட பிறகு சம்பந்தப்பட்ட ஊழியர் பில்லை க்ளைம் செய்து கொள்ளலாம் ; அதன் பேரில் ரூ.1,500/- வழங்கப்படும் ; அடுத்த ஆண்டு முதல் வருடத்திற்கு 10 ஊழியர்கள் மெடிக்கல் செக் அப் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் ; புதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்;

(4)  ஜிப்மர் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் செப்டம்பர் மாதம் மூன்றாவது மாதத்தில் தொலைபேசி நிலையத்தில் நடத்தப்படும் ;

(5)  புக் அவார்டு, ஸ்காலர்ஷிப் வழங்கிட மனுக்கள் 30.09.2016 கடைசி தேதியிட்டு வாங்கப்படும் ; நவம்பர் மாதம் பணம் பட்டுவாடா செய்யப்படும் ;

(6)  கொடுபடாமல் உள்ள டூர் கிராண்ட் இன் எய்ட் தொகையினை விரைந்து வழங்கிட பொதுமேலாளர் உத்திரவிட்டுள்ளார்.

(7)  கேண்டின் நடத்திட விருப்ப மனுக்கள் கோரப்பட்டு இலாக்கா விதிகளின் படி முடிவு எடுக்கப்படும் ;
(8)  பொது மேலாளர் அலுவலக பக்கவாட்டு கேட் காலை இரு சக்கர வாகனங்கள் நிறுத்திட காலை 10.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். பின் பூட்டப்பட்டு மாலை 4.30 மணி முதல் 0630 மணி வரை திறந்திருக்கும்;

(9)  சேமநல நிதியின் கூட்டம் ஆண்டுக்கு இரண்டு முறை கூட்டிட நடவடிக்கை எடுக்கப்படும் ;

(10)  சேமநல நிதியின் பணப்பட்டுவாடா R.T.G.S / N.E.F.T மூலம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும் ;

(11)  இரண்டு ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகள் சில சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்ட பிறகு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.



-    கொ.இரா.இரவிச்சந்திரன் – சேமநலநிதி உறுப்பினர் -  BSNLEU -

Sunday, 7 August 2016

Friday, 22 July 2016

சுற்றுலா - ஜூலை 2016 புகைப்படங்கள் ..

எனது நண்பர்கள் குழாமுடன் 3 நாட்கள் குற்றாலம், திற்பரப்பு சுற்றுலா .. அதிலிருந்து பல அரிய புகைப்படங்களை காட்டப்போகிறேன்.










Monday, 4 July 2016

தோழியர்.பா.மாலா விருப்ப பணி ஓய்வு

பி.எஸ்.என்.எல்-லில் பணி புரிந்து விருப்ப ஓய்வில் பணியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார் தோழியர்.பா.மாலா. பழகுவதற்கு எளியவர். இவரோடு பணிபுரிந்த காலங்கள் இனிமையானவை .. இவரது ஓய்வு கால வாழ்க்கை இனிமையாக அமையட்டும்.


பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

சமீபகாலமாக பெண்கள் மீது நடக்கும் வன்கொடுமைகளைக் கண்டித்து புதுச்சேரி பி.எஸ்.என்.எல் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் இன்று 04.07.2016 மதியம் உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தோழியர்.ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். தோழர்கள் கொளஞ்சியப்பன், கே.ஆர்.ரவிச்சந்திரன், வீ.இராமகிருஷ்ணன் பேசினார்கள். தோழியர்.கண்ணம்மாள் நன்றி கூறினார்.




Friday, 1 July 2016

புதுச்சேரி உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வருகிற திங்கட்கிழமை 04.07.2016 மதியம் 1 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு, புதுச்சேரி


பெண்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளைக் கண்டித்து
ஆர்ப்பாட்டம்


நாள் : 04.07.2016திங்கட்கிழமை மதியம் 1 மணி
இடம் : பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு



தோழர்களே, தோழியர்களே,

நாகரீகச் சமூகம் நாணித் தலைகுனியும் வகையில், பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள் படுகொலைகள் நாளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இச்செய்திகளை செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும், பார்ப்பவர்களையும், கேட்பவர்களையும் பதற வைக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி தலைநகரங்கள் கொலை நகரங்களாக மாறி வருகின்றன. சாதாரண மக்கள் வெளியில் சென்று அலுவல்களை முடித்துக் கொண்டு பாதுகாப்பாக வீட்டிற்குத் திரும்ப எந்த உத்தரவாதமும் இல்லை. சமீபத்தில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த இளம்பெண் சுவாதி ஆள் நடமாட்டம் அதிகமுள்ள சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்படுகிறார். கொலையாளி கொலையை செய்து விட்டு சர்வசாதாரணமாக நடந்து செல்கிறார். இரண்டு மணி நேரம் அந்த உடல் அங்கேயே கிடந்திருக்கிறது. அதே போன்று சேலத்தில் தனியார்பள்ளி ஆசிரியை வினுப்பிரியா படத்தை ஆபாசமாக சித்தரித்து இணைய தளத்தில் ரமேஷ் என்ற அயோக்கியன் வெளியிடுகிறான்.  அவமானம் தாங்காமல் மனமுடைந்து அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.  அதே போல் கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தங்கள் குழந்தைகளை தாய் தந்தையர்களே சாதியின் பெயரால் ஆணவக் கொலை செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது.  புதுச்சேரியிலும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.  இந்தக் கொடுமைகளை கண்டு இனி மேலும் வாளாதிருக்க முடியாது என்பதற்காகவும் பெண்களின் பாதுகாப்பினை தமிழகம், புதுச்சேரி மாநில அரசுகள் உறுதிபடுத்திட வேண்டுமெனக் கோரியும் 04.07.2016 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

-மாவட்டக்குழு-.

தோழியர் லட்சுமி விழுப்புரம் பணி ஓய்வு பாராட்டு விழா 30.6.16

தோழியர் லட்சுமி விழுப்புரம் பணி ஓய்வு பாராடு விழாவில் 30.6.2016 அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள்



Wednesday, 4 May 2016

புதுச்சேரி 7வது அங்கீகாரத் தேர்தல் .. 04.05.2016 கூட்டம்

தமிழகமும், புதுச்சேரியும் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் வருகிற 10.5.2016 அன்று இந்தியா முழுமையிலும் நடைபெற உள்ளது. இதில் தனிநபரை முன்னிறுத்தும் நிலை கிடையாது. 50 சதம் ஓட்டு பெறும் சங்கத்துடன் தான் நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தும். கேட்கவே நன்றாக இருக்கிறது இல்லையா .. ஆனால் நமது பொதுத் தேர்தலில் சிறுபான்மை ஓட்டுப் பெறும் கட்சி தான் நம்மையெல்லாம் ஆள்கிறது .. புரியவில்லையா .. பிறகு விவரமாகப் பார்க்கலாம் , இன்று நடைபெற்றக் கூட்டத்திலிருந்து சில படங்கள் ..