Thursday, 30 July 2015

அப்துல் கலாமுக்கு அஞ்சலி

புதுச்சேரி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சார்பில் முன்னாள் பாரத ஜனாதிபதி பாரதரத்னா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி இன்று காலை (30.07.2015) வியாழன் 11 மணிக்கு பொது மேலாளர் அலுவலகம் முன் நடைபெற்றது.  தோழர்களும், தோழியர்களும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.













Sunday, 19 July 2015

பொன்னியின் செல்வன் நாடகம் அபாரம் ..

நேற்று 18.07.2015 மாலை அண்ணாமலையார் அரங்கில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாடகம் பார்த்தேன். மிகவும் அற்புதம். 3-1/2 மணி நேரம் நம்மை தஞ்சைக்கே அழைத்துச் சென்று விடுகிறார்கள். நல்ல தரமான படைப்பு .. அரங்கம் நிறைந்து வழிந்தது. இவ்வளவு கலா ரசிகர்களா கல்கிக்கு என்று மனம் நிறைந்திருந்தது. நாடகத்தின் இயக்குனர் இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறினார்.  மேலும் தமிழ் கூறும் நல்லுலகை சந்திக்க வருகிற நவம்பர் மாதம் சிவகாமியின் சபதம் அரங்கேற்றப் பட இருப்பதாகச் சொன்னார். வாழ்த்துக்கள். இது போன்ற வரலாற்றுச் சம்பவங்களை திரைப்படமாக எடுத்தால் இளைய தலைமுறையினருக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்த பெருமை கிடைக்கும். தமிழ் திரைப்பட உலகமே முன் வர மாட்டாயா ... ?






மெட்ரோ இரயிலில் குடும்பத்தினருடன் ..

நேற்று 18.07.2015 காலை சென்னை பரங்கிமலையிலிருந்து கோயம்பேடு வரை குடும்பத்தினருடன் பயணம் .. அப்போது எடுக்கப்பட்ட படங்கள்







...

கரிசல்காட்டு நாயகனுடன் ..

புகைப்படக் கலைஞர் நண்பர் இளவேனில் அவர்களின் புதிய புகைப்படட நிலையத் தொடக்க விழாவில் கரிசல் காட்டு நாயகனுடன் நானும் என் மகளும் ...

Saturday, 27 June 2015

திரு.வீ.குணசேகரனுக்கு பாராட்டு விழா

எங்களுடன் புதுச்சேரி பி.எஸ்.என்.எல். யில் பணிபுரியும் திரு.வீ.குணசேகரன் அவர்கள் வருகிற 30.06.2015 அன்று பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு இன்று ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற பிரிவுபச்சார விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் .. 













Monday, 20 April 2015

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அதிகாரிகள் வேலைநிறுத்தம்

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அதிகாரிகள் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தம் 21.04.2015, 22.04.2015 வெற்றிகரமாக தொடங்கியது. இந்த வேலைநிறுத்தத்திற்கு மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையே முழுக் காரணமாகும். தொழிற்சங்கங்கள் 5 மாதங்களுக்கு முன்னரே நோட்டீஸ் கொடுத்திருந்தும் அழைத்துப் பேசக் கூட மந்திரிமார்களுக்கு நேரமில்லை. பாவம் நாதுராம் கோட்சேவுக்கு சிலை வைக்கவும், பாலத்திற்கு கோட்சை பெயரை வைக்கவும் சிந்திக்கவும் செயல்படவும் தான் அவர்களுக்கு நேரமிருக்கிறது. பாவம் பாரதப்பிரதமர். வெளிநாடு சென்று வரவும் இலட்சக்கணக்கில் செலவு செய்து கோட் சூட் மாட்டிக் கொள்ளவும் தான் அவருக்கு நேரம் இருக்கிறது. உலகில் இருக்கிற இந்தியர்களை பார்த்ததும் அவர்களோடு போட்டோவுக்கு போஸ் கொடுத்தது போது. உள்ளூரில் இருக்கிற இந்தியர்கள் குறித்தும் கொஞ்சம் கவலை கொள்ளுங்கள் என்று தான் நாம் சொல்லுகிறோம். இல்லையென்றால் நாளை இந்தியா முழுக்க போராட்ட களமாகத் தான் மாறப் போகிறது. விவசாயிகளின் பிரச்சினை பூதாகரமாக வளர்ந்து கொண்டு வருகிறது. ரோம் நாட்டு மன்னன் போல பிடில் வாசித்துக் கொண்டு இருக்கலாமா என்பதே நமது நியாயமான கவலை.
முன்னதாக புதுச்சேரியில் நேற்று 20.04.2015 மாலை ஊழியர்கள் பங்கேற்ற உணர்ச்சிபூர்வமான ஊர்வலம் நடைபெற்றது. அதிலிருந்து சில படங்கள் ...










Saturday, 21 March 2015

புதுச்சேரி பி.எஸ்.என்.எல்.லில் மகளிர் தின விழா

மகளிர் தின விழா நேற்று 21.03.2015 பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் தோழியர்.இராசேசுவரி தலைமை தாங்கினார். தோழியர்.வை.கண்ணம்மாள் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழியர்.சுகந்தி மாநிலச் செயலாளர் அனைத்திந்திய மாதர் சங்கம் தமிழ் மாநிலம் சிறப்புரையாற்றினார். திருமதி.உஷா நன்றி கூறினார்.
தோழியர். சுகந்தி தனது உரையில் இன்று பெண்கள் சந்தித்து வரும் பல்வேறு பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பேசினார். காரைக்காள் வினோதினி ஆசிட் வீச்சு பிரச்சினையில் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் அதிகமான நிதியுதவி செய்ததை நன்றியோடு நினைவு கூர்ந்தார். நிர்பயா பிரச்சினையில் அந்தப் பெண் வன்புணர்வு செய்த இளைஞர்களை அண்ணா என்னை விட்டு விடுங்கள் என்று மன்றாடியிருந்தாலோ அல்லது காயத்ரி ஜபம் செய்திருந்தாலோ இந்த கொடுமை நடந்திருக்காது என்று சொன்ன போலிச் சாமியார் இரண்டொரு நாட்களிலேயே பாலியல் குற்றச்சாட்டின் பெயரில் கைது செய்யப்பட்டதை சுட்டிக் காட்டினார்.