Monday, 31 July 2017
தோழர்.எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராஜேந்திரன் பணி ஓய்வு
தோழர்.எம்.ஜி.ராஜேந்திரன்
பணி ஓய்வு
எம்.ஜி.ஆர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட
தோழர்.எம்.ஜி.ராஜேந்திரன் இன்று 31.07.2017 பி.எஸ்.என்.எல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
தோழர்.எம்.ஜி.ஆர். 30.07.1957-ல் வந்தவாசியில் பிறந்தார். இவரது தந்தையார்
திரு.எம்.கங்கையா நாயுடு தாயார் முனியம்மாள்.. இவரது தந்தையார் ஒரு விவசாயி. தோழர்.எம்.ஜி.ராஜேந்திரன்
தொடக்கக் கல்வி வந்தவாசி அருகிலுள்ள அரசூரில் அமைந்திருந்தது. பின்னர் 7-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கள்ளக்குறிச்சியிலுள்ள தனது
அக்கா வீட்டில் தங்கிப் படித்தார். 1980 முதல் பி.எஸ்.என்.எல்-லில் பணி புரிகிறார்.
தொடக்க காலத்தில் தொலைத் தொடர்புத் துறையில் மஸ்தூராக பணியாற்றிய போது காட்டிலும்,
மேட்டிலும் வெயிலிலும், மழையிலும் கடுமையாகப் பணியாற்றியிருக்கிறார். தற்போதும் இவரது
சேவை பெரிதும் சக ஊழியர்களாலும், அதிகாரிகளும் பெருமளவுக்கு மதிக்கப்பட்டும் புகழப்பட்டும்
வருகிறது.
இவருக்கு ஒரு மகள். ஒரு மகன். மகள் பி.எஸ்.சி
நர்சிங் படித்து முடித்து விட்டாள். உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து
வருகிறாள். தனது மகளின் சிறுநீரகம் இரண்டு செயலிழந்து போய் அவருக்கு தங்களது சிறுநீரகத்தை
உறவினர்கள் பலர் தானமாக கொடுக்க முன் வந்தனர். எனினும் எதுவும் பொருந்தவில்லை. இறுதியில்
தோழர்.எம்.ஜி.ராஜேந்திரன் அவர்களின் சிறுநீரகம் பொருந்தி வந்த நிலையில் தனது மகளுக்கு
தனது சிறுநீரகத்தை தானமாகக் கொடுத்தார். தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.
இவரது மகன் வில்லியனூர் இந்தியன் வங்கியில் உதவி
மேலாளராக உள்ளார். தொழிற்சங்கத்தின் மீது அபரிதமான பற்று கொண்டவர். சங்கம் கட்டளையிட்ட
போதெல்லாம் அதை சிரமேற்கொண்டு செயல்படுத்தியவர். முன்னணி வீரர். எனினும் தனக்கு தோன்றிய
மாறுபட்ட கருத்துக்களையும் சங்கக் கூட்டங்களில் இவர் அவ்வப்போது வெளிப்படுத்தத் தவறவில்லை.
கடந்த 27.07.2017 அன்று பி.எஸ்.என்.எல்-லில் நடைபெற்ற ஒரு
நாள் அகில இந்திய வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டிருக்கிறார். சங்கத்தின் உத்திரவுக்கு
இவர் கொடுக்கும் மரியாதை இதிலிருந்தே தெரியும்.
பணி ஓய்வுக்குப் பின் சமூக சேவையில் ஈடுபட ஆசை
என்று கூறியிருக்கிறார்.
வா தோழா …. நாம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள்
ஆயிரம் காத்துக்கிடக்கு. உறக்கமின்றி பணியாற்ற வா….
Thursday, 27 October 2016
Friday, 7 October 2016
Thursday, 25 August 2016
25.8.16 பி.எஸ்.என்.எல் புதுச்சேரி சேமநலநிதி கூட்ட முடிவுகள்
புதுச்சேரி
பி.எஸ்.என்.எல் ஊழியர் சேமநல நிதி கூட்டம் – 25.08.2016 முடிவுகள்
புதுச்சேரி பி.எஸ்.என்.எல் ஊழியர் சேமநல
நிதி கூட்டம் இன்று 25.08.2016 மதியம் 3 மணி முதல் நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள்
வருமாறு :
(1) ஊழியர்களுக்கு வழங்கப்படும்
திருமணக் கடன் ரூ.50,000/-ஆக உடனடியாக உயர்த்தப்படுகிறது
;
(2) உள்ளூரில் ஒரு மருத்துவமனையை
ஊழியர்கள் மருத்துவம் பார்ப்பதற்கு ஏதுவாக பட்டியலில் இணைத்திட நடவடிக்கை எடுக்கப்படும்
(நல்லாம் (அ) ஏ.ஜி.பத்மாவதி (அ) நியூ மெடிக்கல் செண்டர்) ; ஒவ்வொரு 6 மாதமும் பட்டியலில் உள்ள மருத்துவமனைகள் பற்றிய
விவரம் ஊழியர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் அலுவலக அறிவிப்புப் பலகையின் மூலம்
தெரிவிக்கப்படும் ;
(3) மெடிக்கல் செக் அப் செய்து
கொள்வதற்கு ஊழியர்களிடம் இருந்து மனுக்கள் கோரப்படும் ; பணி மூப்பு அடிப்படையில் இந்த
ஆண்டு மட்டும் 20 ஊழியர்கள் மெடிக்கல் செக்
அப் செய்து கொள்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் ; மெடிக்கல் செக் அப் செய்து கொண்ட பிறகு
சம்பந்தப்பட்ட ஊழியர் பில்லை க்ளைம் செய்து கொள்ளலாம் ; அதன் பேரில் ரூ.1,500/- வழங்கப்படும் ; அடுத்த ஆண்டு முதல் வருடத்திற்கு
10 ஊழியர்கள் மெடிக்கல் செக்
அப் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் ; புதியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்;
(4) ஜிப்மர் மருத்துவமனையுடன்
இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் செப்டம்பர் மாதம் மூன்றாவது மாதத்தில் தொலைபேசி நிலையத்தில்
நடத்தப்படும் ;
(5) புக் அவார்டு, ஸ்காலர்ஷிப்
வழங்கிட மனுக்கள் 30.09.2016 கடைசி தேதியிட்டு வாங்கப்படும்
; நவம்பர் மாதம் பணம் பட்டுவாடா செய்யப்படும் ;
(6) கொடுபடாமல் உள்ள டூர் கிராண்ட்
இன் எய்ட் தொகையினை விரைந்து வழங்கிட பொதுமேலாளர் உத்திரவிட்டுள்ளார்.
(7) கேண்டின் நடத்திட விருப்ப
மனுக்கள் கோரப்பட்டு இலாக்கா விதிகளின் படி முடிவு எடுக்கப்படும் ;
(8) பொது மேலாளர் அலுவலக பக்கவாட்டு
கேட் காலை இரு சக்கர வாகனங்கள் நிறுத்திட காலை 10.30 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். பின் பூட்டப்பட்டு மாலை 4.30 மணி முதல் 0630 மணி வரை திறந்திருக்கும்;
(9) சேமநல நிதியின் கூட்டம்
ஆண்டுக்கு இரண்டு முறை கூட்டிட நடவடிக்கை எடுக்கப்படும் ;
(10) சேமநல நிதியின் பணப்பட்டுவாடா R.T.G.S / N.E.F.T மூலம் செய்திட நடவடிக்கை
எடுக்கப்படும் ;
(11) இரண்டு ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகள் சில சந்தேகங்கள்
நிவர்த்தி செய்யப்பட்ட பிறகு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
-
கொ.இரா.இரவிச்சந்திரன் – சேமநலநிதி உறுப்பினர்
- BSNLEU -
Sunday, 7 August 2016
Subscribe to:
Posts (Atom)











