Wednesday, 12 August 2015

பி.எஸ்.என்.எல் டவர்களை தனியே பிரிக்காதே - ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் ...
தற்சமயம் அனைத்து செல் போன் டவர்களும் பி.எஸ்.என்.எல் வசம் உள்ளது. அதாவது மக்களின் வரிப்பணத்தில் உருவான சொத்து அரசுத்துறையின் கையில் பத்திரமாக உள்ளது. மோடி தலைமையிலான மத்திய அரசு இந்த டவர்களையெல்லாம் ஒன்று சேர்த்து டவர் கார்ப்பரேசன் ஆப் இந்தியா என்கிற ஒரு அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னால் தான் பி.எஸ்.என்.எல் பிராட்பேண்ட் சேவையை தனியே பிரித்து பி.பி.என்.எல் என்கிற அமைப்பை உருவாக்கியது. அதாவது பி.எஸ்.என்.எல் என்கிற அமைப்பின் கீரிம் போன்ற பகுதிகளை தனியே பிரித்து எடுத்து பி.எஸ்.என்.எல்-யை நஷ்டமாக்க முயற்சிப்பது. பின்னர் பிரித்த பகுதிகளை முதலாளிகளுக்கு கொடுத்து விடுவது என்பது தான் மோடி அரசின் திட்டம் .. இதை எதிர்த்து பி.எஸ்.என்.எல்-லில் பணிபுரியும் ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை ஒன்று திரண்டு இன்று (12.08.2015) மாலை கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.. புதுச்சேரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ...







Thursday, 30 July 2015

அப்துல் கலாமுக்கு அஞ்சலி

புதுச்சேரி பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சார்பில் முன்னாள் பாரத ஜனாதிபதி பாரதரத்னா ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி இன்று காலை (30.07.2015) வியாழன் 11 மணிக்கு பொது மேலாளர் அலுவலகம் முன் நடைபெற்றது.  தோழர்களும், தோழியர்களும் தங்கள் அஞ்சலியை செலுத்தினர்.













Sunday, 19 July 2015

பொன்னியின் செல்வன் நாடகம் அபாரம் ..

நேற்று 18.07.2015 மாலை அண்ணாமலையார் அரங்கில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாடகம் பார்த்தேன். மிகவும் அற்புதம். 3-1/2 மணி நேரம் நம்மை தஞ்சைக்கே அழைத்துச் சென்று விடுகிறார்கள். நல்ல தரமான படைப்பு .. அரங்கம் நிறைந்து வழிந்தது. இவ்வளவு கலா ரசிகர்களா கல்கிக்கு என்று மனம் நிறைந்திருந்தது. நாடகத்தின் இயக்குனர் இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறினார்.  மேலும் தமிழ் கூறும் நல்லுலகை சந்திக்க வருகிற நவம்பர் மாதம் சிவகாமியின் சபதம் அரங்கேற்றப் பட இருப்பதாகச் சொன்னார். வாழ்த்துக்கள். இது போன்ற வரலாற்றுச் சம்பவங்களை திரைப்படமாக எடுத்தால் இளைய தலைமுறையினருக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்த பெருமை கிடைக்கும். தமிழ் திரைப்பட உலகமே முன் வர மாட்டாயா ... ?






மெட்ரோ இரயிலில் குடும்பத்தினருடன் ..

நேற்று 18.07.2015 காலை சென்னை பரங்கிமலையிலிருந்து கோயம்பேடு வரை குடும்பத்தினருடன் பயணம் .. அப்போது எடுக்கப்பட்ட படங்கள்







...

கரிசல்காட்டு நாயகனுடன் ..

புகைப்படக் கலைஞர் நண்பர் இளவேனில் அவர்களின் புதிய புகைப்படட நிலையத் தொடக்க விழாவில் கரிசல் காட்டு நாயகனுடன் நானும் என் மகளும் ...

Saturday, 27 June 2015

திரு.வீ.குணசேகரனுக்கு பாராட்டு விழா

எங்களுடன் புதுச்சேரி பி.எஸ்.என்.எல். யில் பணிபுரியும் திரு.வீ.குணசேகரன் அவர்கள் வருகிற 30.06.2015 அன்று பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு இன்று ஊழியர்கள் சார்பில் நடைபெற்ற பிரிவுபச்சார விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ..