Friday, 1 July 2016

புதுச்சேரி உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வருகிற திங்கட்கிழமை 04.07.2016 மதியம் 1 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு, புதுச்சேரி


பெண்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளைக் கண்டித்து
ஆர்ப்பாட்டம்


நாள் : 04.07.2016திங்கட்கிழமை மதியம் 1 மணி
இடம் : பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு



தோழர்களே, தோழியர்களே,

நாகரீகச் சமூகம் நாணித் தலைகுனியும் வகையில், பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள் படுகொலைகள் நாளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இச்செய்திகளை செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும், பார்ப்பவர்களையும், கேட்பவர்களையும் பதற வைக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி தலைநகரங்கள் கொலை நகரங்களாக மாறி வருகின்றன. சாதாரண மக்கள் வெளியில் சென்று அலுவல்களை முடித்துக் கொண்டு பாதுகாப்பாக வீட்டிற்குத் திரும்ப எந்த உத்தரவாதமும் இல்லை. சமீபத்தில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த இளம்பெண் சுவாதி ஆள் நடமாட்டம் அதிகமுள்ள சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்படுகிறார். கொலையாளி கொலையை செய்து விட்டு சர்வசாதாரணமாக நடந்து செல்கிறார். இரண்டு மணி நேரம் அந்த உடல் அங்கேயே கிடந்திருக்கிறது. அதே போன்று சேலத்தில் தனியார்பள்ளி ஆசிரியை வினுப்பிரியா படத்தை ஆபாசமாக சித்தரித்து இணைய தளத்தில் ரமேஷ் என்ற அயோக்கியன் வெளியிடுகிறான்.  அவமானம் தாங்காமல் மனமுடைந்து அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.  அதே போல் கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தங்கள் குழந்தைகளை தாய் தந்தையர்களே சாதியின் பெயரால் ஆணவக் கொலை செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது.  புதுச்சேரியிலும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.  இந்தக் கொடுமைகளை கண்டு இனி மேலும் வாளாதிருக்க முடியாது என்பதற்காகவும் பெண்களின் பாதுகாப்பினை தமிழகம், புதுச்சேரி மாநில அரசுகள் உறுதிபடுத்திட வேண்டுமெனக் கோரியும் 04.07.2016 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

-மாவட்டக்குழு-.

தோழியர் லட்சுமி விழுப்புரம் பணி ஓய்வு பாராட்டு விழா 30.6.16

தோழியர் லட்சுமி விழுப்புரம் பணி ஓய்வு பாராடு விழாவில் 30.6.2016 அன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள்



Wednesday, 4 May 2016

புதுச்சேரி 7வது அங்கீகாரத் தேர்தல் .. 04.05.2016 கூட்டம்

தமிழகமும், புதுச்சேரியும் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் வருகிற 10.5.2016 அன்று இந்தியா முழுமையிலும் நடைபெற உள்ளது. இதில் தனிநபரை முன்னிறுத்தும் நிலை கிடையாது. 50 சதம் ஓட்டு பெறும் சங்கத்துடன் தான் நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தும். கேட்கவே நன்றாக இருக்கிறது இல்லையா .. ஆனால் நமது பொதுத் தேர்தலில் சிறுபான்மை ஓட்டுப் பெறும் கட்சி தான் நம்மையெல்லாம் ஆள்கிறது .. புரியவில்லையா .. பிறகு விவரமாகப் பார்க்கலாம் , இன்று நடைபெற்றக் கூட்டத்திலிருந்து சில படங்கள் ..





Tuesday, 6 October 2015

பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு போனஸ் வழங்க வேண்டும் என்று கோரி இன்று 06.09.2015 பொது மேலாளர் அலுவலகம் முன்பு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்த ஆர்ப்பாட்டம் .. ஆர்ப்பாட்டத்தில் என் அருமைத் தோழர் என்.கொளஞ்சியப்பன் .. எல்லோரும் இணைந்திருப்பதே ஒரு மகிழ்ச்சி தான் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் போனஸ் பெற்றது..; நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது எங்கிற காரணத்தைச் சொல்லி கொடுக்கவே இல்லை. எல்லோரும் ஏதாவது ஒரு தொகையை போனஸ் என்று சொல்லி கொண்டு செல்லும் போது வருடம் முழுக்க உழைத்தோமே ஏன் இல்லை என்கிற கேள்வி எழுந்தது. ஒரு வகையில் தீபாவளியை எனக்குப் பிடிக்கும். இல்லையென்றால் பலர் புதுத் துணி போட மாட்டார்கள். ஒரு சந்தோஷமான அனுபவம் வாழ்க்கையில் விடுபட்டு போயிருக்கும். போனஸ் என்பது கொடுபடாத ஊதியமே என்று சொன்னது சுப்ரீம் கோர்ட்டு .. கணக்கு போட்டுப் பார்த்தால் உண்








மை புரியும்..

Wednesday, 16 September 2015

டவர்களை வளைத்து தனியே கார்ப்பரேஷன் கண்டன ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல். யில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை இன்று 16.09.2015 தர்ணா போராட்டம் -- தற்சமயம் பி.எஸ்.என்.எல் கையிருப்பில் உள்ள 65,000 செல் போன் டவர்களை கைப்பற்றி தனியே ஒரு கார்ப்பரேஷன் அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதைக் க்ண்டித்து இந்த போராட்டம் .. 
ஏற்கெனவே மத்திய அரசு தற்சமயம் பி.எஸ்.என்.எல் வசம் இருக்கும் பிராட் பேண்ட் சேவையை தனியாருக்கு தாரை வார்க்க B.B.N.L  என்றொரு கார்ப்பரேஷன் அமைத்துள்ளது. எல்லாம் தனியார் முதலாளிகளை குஷிபடுத்தத்தான். அரசு கையில் இருக்கும் வரை ஒன்றும் செய்ய முடியாது. தனியே வந்தால் அடித்து சாப்பிட்டு விடலாம் அல்லவா .. எனவே இந்த போராட்டம் ...







Wednesday, 2 September 2015

புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களின் மறியல் போராட்டம் மத்திய மாநில அரசுகளை எதிர்த்து ...மறியல்

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இன்று






(02.09.2015) தொலைத் தொடர்பு, வங்கி, மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், இன்ஸுரன்சு ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் .. புதுச்சேரி மாநில அரசு ஊழியர்கள் கும்பல் கும்பலாக கைதானார்கள் ..

நாடு தழுவிய 02.09.2015 வேலை நிறுத்தம் - சில காட்சிகள்

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இன்று(02.09.2015) தொலைத் தொடர்பு, வங்கி, மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், இன்ஸுரன்சு ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் ..