Sunday 15 February 2015

தற்போதைய மைய அரசு முந்தைய காங்கிரஸ் அரசினைப் போலவே அனைத்து அரசுத் துறை நிறுவங்களையும் தனியாருக்கு தாரை வார்ரக்க ஏதுவாக பல்வேறு பணிகளை த் தொடங்கியுள்ளது. குறிப்பாக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை பங்கு மார்க்கெட்டில் நுழைத்து தனியார் கைகளில் கொடுக்க அரும்பாடுபட்டு வருகிறறது. இதை எதிர்த்து பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் நாடு முழுவதும் உள்ள பொதுமக்களைச் சந்தித்து  பி.எஸ்.என்.எல்-ஐ தனியார் வேட்டைக்காடாக மாற்றதே என்று ஒரு கோடி கையெழுத்து வாங்கும் இயக்கத்தை நடத்தி வருகிறது. இதையொட்டி புதுச்சேரியில் கையெழுத்து இயக்கம் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது . பணியில் தோழர்களும், தோழியர்களும் ...





Saturday 7 February 2015

ஊழியருக்கான கண் பரிசோதனை முகாம் -

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணிபுரியும் கான்டிராக்ட் ஊழியர்கள் சங்கத்தின் அமைப்பு தினத்தையொட்டி இன்று 07.02.2015 புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கம் சார்பில் ஜிப்மர் மருத்துவமனையின் கண் சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுடன் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமினை தோழர்.த.முருகன் (ஜிப்மர் மருத்துவமனை பாதுகாப்பு இயக்கம்) தொடங்கி வைத்தார். அதன் பின் பாரதி புத்தகாலயத்தின் புத்தக விற்பனை இயக்கத்தையும் தொடங்கி வைத்தார். அப்போது கலைமாமணி மன்னர்மன்னன் (மஹாகவி பாரதியின் இலக்கிய வாரிசு பாரதிதாசன் அவர்களின் புதல்வர்) உடன் சேர்ந்து கலந்து கொண்டார்.  கண் பரிசோதனை முகாமில் பங்கேற்ற தோழர். முருகன் மூத்த கண் பரிசோதகர் திரு.மதன் மற்றும் மருத்துவக் குழுவுக்கு சங்க நிர்வாகிகள் தோழர்கள். மகாலிங்கம், ஏ.சுப்ரமணியன், என்.கொளஞ்சியப்பன், ஏ.முருகையன், எஸ்.சங்கரன், கலியபெருமாள், எம்.ஜி.ராஜேந்திரன், கணேசன் கைத்தறி துண்டு அணிவித்து கெளரவித்தனர். முகாமில் ஊழியர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.