Saturday 17 January 2015

திரு.ஞா.மரியப்பிரகாசம் பணி ஓய்வு ..

திரு.ஞா.மரியபிரகாசம் பணி ஓய்வு
      நண்பர்.திரு.ஞா.மரியபிரகாசம் வருகிற 31.01.2015 முதல் பி.எஸ்.என்.எல்-யில் இருந்து பணி ஓய்வு பெறுகிறார்.
குடும்ப உறவுகள்:
      11.01.1955 அன்று புதுச்சேரியில் திரு.பி.ஞானமுத்து மற்றும் திருமதி.தனசெல்வமரி ஜோசப் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். புதுச்சேரி கவர்ன்மெண்ட் மிஷன் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்தார். இவரது மனைவி.எம்.கரோலின். இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் பிரதீப்ராஜீக்கு திருமணமாகிவிட்டது. இவர் கோயமுத்தூரிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணியாற்றுகிறார். இவரது இரண்டாவது மகன் சக்கரியாஸ் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் உதிரி பாக கம்பெனியில் பணியாற்றுகிறார். இன்னும் திருமணமாகவில்லை.
பி.எஸ்.என்.எல். பணி குறித்து :
      இவர் 1977 முதல் 1979 வரை மூன்று வருடம் தற்காலிக ஊழியராக இருந்து கோயாக்சில்  அலுவலகத்திலும், தந்தி அலுவலகத்திலும், துணைக் கோட்ட அதிகாரி அலுவலகத்திலும் வாட்டர்பாயாகவும், இரவு வாட்ச்மேன் வேலையிலும் பணிபுரிந்தார். 23.07.1980 முதல் தொலைத்தொடர்புத் துறையில் நிரந்தர ஊழியராக பணியாற்றி வருகிறார். இதுவரை 35 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
      பணி ஓய்வுக்குப்பின்னும் பி.எஸ்.என்.எல்.லில் பணி செய்ய விரும்புகிறார்.
இவர் பொதுவாக கூற விரும்பும் செய்தி :
      “இந்த பி.எஸ்.என்.எல். டிபார்ட்மெண்ட்டில் ஊதியம் வழங்குவது போல வேறெந்த துறையிலும் நிச்சயம் கிடைக்காது. 1977 மற்றும் 1979 சாதாரண ரூ.5/- ரூபாயில் தான் வேலை பார்த்தேன். மூன்று வருடமாக கஷ்டப்பட்டு உழைத்தேன். இதற்குக் காரணம் என் குடும்ப கஷ்டம் தான். அன்றைய சூழ்நிலையில் நான் அப்படியெல்லாம் கஷ்டப்பட்டதால் தான் இன்றைக்கு மன நிம்மதியான முறையில் நான் 31.01.2015 அன்று பணி ஓய்வு பெறுகிறேன்”.

      இவரது கைபேசி எண்.9486106697.  
      புதுச்சேரி பி.எஸ்.என்.எல்-லில் O.C.B பகுதியில் மிகச்சிறப்பாக சேவை செய்து வரும் இவர் வருகிற 31.01.2015 அன்று பணி ஓய்வு பெறுகிறார்.

 இவரது ஓய்வு கால வாழ்க்கை சிறப்பாக அமைந்திட வாழ்த்துவோம்.
(உங்களது கருத்துக்களை பகிருங்கள். முடிந்தவர்கள் இதை மேம்படுத்துவது குறித்தும் குறை நிறைகளையும் எனக்கு 9443601439 என்ற எண்ணுக்கு தெரியப்படுத்துங்கள். அன்புடன் ..  கொ.இரா.இரவிச்சந்திரன்)





Friday 16 January 2015

திரு.பொன்.காசிராஜன் பணி ஓய்வு ...

நம்மவர்களை நினைவு கூர்வோம்….
      புதுச்சேரி பி.எஸ்.என்.எல்.யில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பற்றிய குறிப்பினை அவர்களது புகைப்படத்துடன் நோட்டீஸாக வெளியிடும் பழக்கத்தை, செலவைப் பற்றிக் கவலைப்படாது நண்பர்.திரு.ஆரோக்கியராஜ் கிளேடண் ஜேம்ஸ் செய்து வந்தார்.  உடல் நலக்குறைவு காரணமாக திரு.ஆரோக்கியராஜ் மறைந்தார். அவரது மறைவு நண்பர்களுக்கும், சக ஊழியர்களுக்கும், குடும்பத்தார்க்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
      பணி ஓய்வு பெற்றுச் செல்பவர்களை நினைவு கூர்பவர்கள் மிகக் குறைவு. பணி ஓய்வு பெற்றுச் செல்பவர்களை அனைத்து ஊழியர்களையும் அழைத்து பாராட்ட வேண்டிய நிர்வாகமோ செலவைக் காரணம் காட்டி அந்த நிகழ்வைக் குட்டியாக சுருக்கி விட்டது. பணி ஓய்வு பெற்றுச் சென்ற அடுத்த நாளே அவருக்கு அவர் பணியாற்றிய இடத்தில் கிடைக்கும் மரியாதையே வேறு மாதிரியாக இருக்கும். அவரது நினைவினை அனைவரும் அறிந்து கொள்ளச் செய்யும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எனக்குத் தோன்றியது. அவர்கள் பற்றிய தகவல்களை திரட்டி “CTOGETOGETHER.BLOGSPOT.IN”- யில் போட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணினேன். அதன் முதல் முயற்சி தான் அன்பு நண்பர்.திரு. பொன்.காசிராஜன் அவர்களைப் பற்றிய இச்செய்தி. படியுங்கள். உங்களது கருத்துக்களை பகிருங்கள். முடிந்தவர்கள் இதை மேம்படுத்துவது குறித்தும் குறை நிறைகளையும் எனக்கு 9443601439 என்ற எண்ணுக்கு தெரியப்படுத்துங்கள்.
அன்புடன் ..
 கொ.இரா.இரவிச்சந்திரன்.







திரு.பொன்.காசிராஜன் பணி ஓய்வு
      நண்பர்.திரு.பொன்.காசிராஜன் வருகிற 31.01.2015 முதல் பி.எஸ்.என்.எல்-யில் இருந்து பணி ஓய்வு பெறுகிறார்.
குடும்ப உறவுகள்:
      28.01.1955 அன்று தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் திரு.வே.பொன்னுசாமி, பொன்.இலட்சுமி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். கடலூர் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி (கணிதம்) படித்து முடித்தார்.  இவரது இளைய சகோதரி.கு.காசியம்மாள் திருவள்ளூரில் வசிக்கிறார். இவரது அண்ணன் பொன்.பன்னீர்செல்வம் கடலூர் திருவந்திபுரத்தில்  தலைமையாசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் காலமாகி விட்டார். இவரது அக்கா ஒருவர் சென்னையிலும், இன்னொருவர் ஆந்திரபிரதேசம் நாகலபுரத்தில் பேன்சி ஸ்டோர்ஸ், கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் பேக்கரி வைத்துள்ளார். இவரது மனைவி.கா.கலைமணி. இவரது மகள் கா.பிரியா B.Tech, MS (USA) படித்து முடித்துவிட்டு தற்சமயம் அமெரிக்காவில் பணிபுரிகிறார். திருமணமாகிவிட்டது. இவரது மகன் கா.பாலாஜி B.Pharm, MBA படித்து முடித்துவிட்டு தற்சமயம் புதுச்சேரியில் INTEGRA எனும் கம்பெனியில் பணிபுரிகிறார்.
பி.எஸ்.என்.எல். பணி குறித்து :
      இவர் 22.04.1975 அன்று தொலைபேசி இயக்குநராக திண்டிவனத்தில் பணியில் சேர்ந்தார். 39 வருடங்கள் 9 மாதங்கள் பணியாற்றியுள்ளார். தற்போது புதுச்சேரியில் துணைக் கோட்ட அதிகாரியாக பணி புரிகிறார்.
            இவர் பொதுவாக கூற விரும்பும் செய்தி :
“எனக்கு நல்லதொரு வாழ்வு தந்த எனது இலாக்காவிற்கு நன்றி”

      இவரது கைபேசி எண்.9486102805 இல்லத் தொலைபேசி எண்.0413-2201323
இ-மெயில் முகவரி : kasirajan_55@yahoo.com
      மிகச்சிறப்பாக சேவை செய்து வரும் இவர் வருகிற 31.01.2015 அன்று பணி ஓய்வு பெறுகிறார்.
 இவரது ஓய்வு கால வாழ்க்கை சிறப்பாக அமைந்திட வாழ்த்துவோம்.






Tuesday 13 January 2015

மக்களுக்கான போராட்டம்
இன்று மாலை புதுச்சேரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல் ஊழியர் சங்கம் சார்பில் செல்போன் சிம்கார்டு தட்டுபாடின்றி பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைத்து ஆர்ப்பாட்டம் ..






  இன்று பொதுவாக நிலவும் ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால் தொழிற்சங்கங்கள் தங்களது ஊதிய உயர்வு, பஞ்சப்படி போன்ற பொருளாதார கோரிக்கைகளுக்காகத் தான் போராடுகின்றனவேயன்றி மக்கள் நலன் குறித் சிறிதும் கவலைப்படுவது கிடையாது என்பது தான்.
இக்குறை களையப்படும் போது தான் மக்களின் ஆதரவு தொழிலாளர்களுக்குக் கிடைக்கும். தொழிலாளத் தோழர்கள் யோசிப்பார்களா ?
இன்று நடந்த போராட்டம் உண்மையில் பாராட்டத்தக்கது.
இது மட்டுமல்ல பி.எஸ்.என்.எல் என்ற மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட கோட்டையை தனியாருக்குத் தாரை வார்க்கப்படக்கூடாது என்பதற்கான மாபெரும் போராட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திலுள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் துவக்கி உள்ளனர். ஒரு கோடி கையெழுத்து பெற்று மைய அரசிடம் சமர்ப்பிப்பது தான் அந்த போராட்டம்.  மக்களுக்காக மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் சூறையாடப்பட அனுமதிக்கக் கூடாது.  வாருங்கள் கரங்களை இணைப்போம் ..