நம்மவர்களை
நினைவு கூர்வோம்….
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்.யில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்கள்
மற்றும் அதிகாரிகள் பற்றிய குறிப்பினை அவர்களது புகைப்படத்துடன் நோட்டீஸாக வெளியிடும்
பழக்கத்தை, செலவைப் பற்றிக் கவலைப்படாது நண்பர்.திரு.ஆரோக்கியராஜ் கிளேடண் ஜேம்ஸ் செய்து
வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக திரு.ஆரோக்கியராஜ்
மறைந்தார். அவரது மறைவு நண்பர்களுக்கும், சக ஊழியர்களுக்கும், குடும்பத்தார்க்கும்
ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
பணி ஓய்வு பெற்றுச் செல்பவர்களை நினைவு கூர்பவர்கள் மிகக் குறைவு.
பணி ஓய்வு பெற்றுச் செல்பவர்களை அனைத்து ஊழியர்களையும் அழைத்து பாராட்ட வேண்டிய நிர்வாகமோ
செலவைக் காரணம் காட்டி அந்த நிகழ்வைக் குட்டியாக சுருக்கி விட்டது. பணி ஓய்வு பெற்றுச்
சென்ற அடுத்த நாளே அவருக்கு அவர் பணியாற்றிய இடத்தில் கிடைக்கும் மரியாதையே வேறு மாதிரியாக
இருக்கும். அவரது நினைவினை அனைவரும் அறிந்து கொள்ளச் செய்யும் வகையில் ஏதாவது செய்ய
வேண்டும் என்கிற எண்ணம் எனக்குத் தோன்றியது. அவர்கள் பற்றிய தகவல்களை திரட்டி “CTOGETOGETHER.BLOGSPOT.IN”-
யில் போட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணினேன். அதன் முதல் முயற்சி தான் அன்பு நண்பர்.திரு.
பொன்.காசிராஜன் அவர்களைப் பற்றிய இச்செய்தி. படியுங்கள். உங்களது கருத்துக்களை பகிருங்கள்.
முடிந்தவர்கள் இதை மேம்படுத்துவது குறித்தும் குறை நிறைகளையும் எனக்கு 9443601439 என்ற
எண்ணுக்கு தெரியப்படுத்துங்கள்.
அன்புடன் ..
கொ.இரா.இரவிச்சந்திரன்.
திரு.பொன்.காசிராஜன்
பணி ஓய்வு
நண்பர்.திரு.பொன்.காசிராஜன் வருகிற 31.01.2015 முதல்
பி.எஸ்.என்.எல்-யில் இருந்து பணி ஓய்வு பெறுகிறார்.
குடும்ப
உறவுகள்:
28.01.1955 அன்று
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் திரு.வே.பொன்னுசாமி, பொன்.இலட்சுமி தம்பதியினருக்கு
மகனாகப் பிறந்தார். கடலூர் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி (கணிதம்) படித்து முடித்தார். இவரது இளைய சகோதரி.கு.காசியம்மாள் திருவள்ளூரில்
வசிக்கிறார். இவரது அண்ணன் பொன்.பன்னீர்செல்வம் கடலூர் திருவந்திபுரத்தில் தலைமையாசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர்
காலமாகி விட்டார். இவரது அக்கா ஒருவர் சென்னையிலும், இன்னொருவர் ஆந்திரபிரதேசம் நாகலபுரத்தில்
பேன்சி ஸ்டோர்ஸ், கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் பேக்கரி வைத்துள்ளார். இவரது மனைவி.கா.கலைமணி.
இவரது மகள் கா.பிரியா B.Tech,
MS (USA)
படித்து முடித்துவிட்டு தற்சமயம் அமெரிக்காவில் பணிபுரிகிறார். திருமணமாகிவிட்டது.
இவரது மகன் கா.பாலாஜி B.Pharm,
MBA
படித்து முடித்துவிட்டு தற்சமயம் புதுச்சேரியில் INTEGRA எனும் கம்பெனியில் பணிபுரிகிறார்.
பி.எஸ்.என்.எல்.
பணி குறித்து :
இவர் 22.04.1975 அன்று தொலைபேசி இயக்குநராக திண்டிவனத்தில் பணியில்
சேர்ந்தார். 39 வருடங்கள் 9 மாதங்கள் பணியாற்றியுள்ளார். தற்போது புதுச்சேரியில் துணைக்
கோட்ட அதிகாரியாக பணி புரிகிறார்.
இவர் பொதுவாக கூற விரும்பும்
செய்தி :
“எனக்கு நல்லதொரு வாழ்வு தந்த
எனது இலாக்காவிற்கு நன்றி”
இவரது கைபேசி எண்.9486102805 இல்லத் தொலைபேசி எண்.0413-2201323
இ-மெயில் முகவரி : kasirajan_55@yahoo.com
மிகச்சிறப்பாக சேவை செய்து வரும் இவர் வருகிற 31.01.2015 அன்று பணி
ஓய்வு பெறுகிறார்.
இவரது ஓய்வு கால வாழ்க்கை சிறப்பாக அமைந்திட
வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment