நேற்று 18.07.2015 மாலை அண்ணாமலையார் அரங்கில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாடகம் பார்த்தேன். மிகவும் அற்புதம். 3-1/2 மணி நேரம் நம்மை தஞ்சைக்கே அழைத்துச் சென்று விடுகிறார்கள். நல்ல தரமான படைப்பு .. அரங்கம் நிறைந்து வழிந்தது. இவ்வளவு கலா ரசிகர்களா கல்கிக்கு என்று மனம் நிறைந்திருந்தது. நாடகத்தின் இயக்குனர் இறுதியில் அனைவருக்கும் நன்றி கூறினார். மேலும் தமிழ் கூறும் நல்லுலகை சந்திக்க வருகிற நவம்பர் மாதம் சிவகாமியின் சபதம் அரங்கேற்றப் பட இருப்பதாகச் சொன்னார். வாழ்த்துக்கள். இது போன்ற வரலாற்றுச் சம்பவங்களை திரைப்படமாக எடுத்தால் இளைய தலைமுறையினருக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுத்த பெருமை கிடைக்கும். தமிழ் திரைப்பட உலகமே முன் வர மாட்டாயா ... ?
No comments:
Post a Comment