Friday 1 July 2016

புதுச்சேரி உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் வருகிற திங்கட்கிழமை 04.07.2016 மதியம் 1 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம்

பி.எஸ்.என்.எல் உழைக்கும் மகளிர் ஒருங்கிணைப்புக் குழு, புதுச்சேரி


பெண்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகளைக் கண்டித்து
ஆர்ப்பாட்டம்


நாள் : 04.07.2016திங்கட்கிழமை மதியம் 1 மணி
இடம் : பி.எஸ்.என்.எல் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு



தோழர்களே, தோழியர்களே,

நாகரீகச் சமூகம் நாணித் தலைகுனியும் வகையில், பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள் படுகொலைகள் நாளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இச்செய்திகளை செய்தித் தாள்களிலும், தொலைக்காட்சிகள் வாயிலாகவும், பார்ப்பவர்களையும், கேட்பவர்களையும் பதற வைக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரி தலைநகரங்கள் கொலை நகரங்களாக மாறி வருகின்றன. சாதாரண மக்கள் வெளியில் சென்று அலுவல்களை முடித்துக் கொண்டு பாதுகாப்பாக வீட்டிற்குத் திரும்ப எந்த உத்தரவாதமும் இல்லை. சமீபத்தில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்த இளம்பெண் சுவாதி ஆள் நடமாட்டம் அதிகமுள்ள சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்படுகிறார். கொலையாளி கொலையை செய்து விட்டு சர்வசாதாரணமாக நடந்து செல்கிறார். இரண்டு மணி நேரம் அந்த உடல் அங்கேயே கிடந்திருக்கிறது. அதே போன்று சேலத்தில் தனியார்பள்ளி ஆசிரியை வினுப்பிரியா படத்தை ஆபாசமாக சித்தரித்து இணைய தளத்தில் ரமேஷ் என்ற அயோக்கியன் வெளியிடுகிறான்.  அவமானம் தாங்காமல் மனமுடைந்து அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.  அதே போல் கலப்பு திருமணம் செய்து கொள்ளும் தங்கள் குழந்தைகளை தாய் தந்தையர்களே சாதியின் பெயரால் ஆணவக் கொலை செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது.  புதுச்சேரியிலும் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.  இந்தக் கொடுமைகளை கண்டு இனி மேலும் வாளாதிருக்க முடியாது என்பதற்காகவும் பெண்களின் பாதுகாப்பினை தமிழகம், புதுச்சேரி மாநில அரசுகள் உறுதிபடுத்திட வேண்டுமெனக் கோரியும் 04.07.2016 அன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

-மாவட்டக்குழு-.

No comments:

Post a Comment