Wednesday 12 February 2020

தாயகம் நோக்கி நிகழ்வு 11.02.2020 - பகுதி இரண்டு








தோழர்.டி.கோபாலகிருஷ்ணன்…
நான் 1966ல் பணியில் சேர்ந்தேன். 1984ல் தந்திப் பகுதி மூன்றின் தமிழ் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டேன். 1966 முதல் 1984 வரை தஞ்சாவூரில் பணியாற்றினேன். ஒழுக்கத்தை நான் தந்திப் பகுதியில் பணி புரியும் போது தான் கற்றுக் கொண்டேன்.
      டெலிகிராப்மேனுக்கு போஸ்ட்மேனுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டுமென ஊதியக் குழுவிடம் கேட்ட போது போஸ்ட்மேன் பணப் பரிவர்த்தனைப் பணிகளில் ஈடுபடுகிறார்…ஆனால் டெலிகிராப் மேன் பணப் பரிவர்த்தனைப் பணிகளில் ஈடுபடுவத்திலை என்பதால் கொடுக்க முடியாது என்று சொன்னார்கள். எனவே தந்திப் பகுதியில் Electronic Money Transfer (E.M.T) எனப்படும் மணியார்டர் சேவையினை உள் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தினோம். 5வது ஊதியக் குழு முன் டெலிகிராப்மேனுக்கு போஸ்ட்மேனுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டுமென கோரிக்கையினை மீண்டும் எழுப்பினோம். இம்முறை நாம் வென்றோம். டெலிகிராப்மேன் தோழர்கள் போஸ்ட்மேனுக்கு இணையான ஊதியம் பெற்றார்கள்.
      விருப்ப ஓய்வு கொடுக்க வேண்டாம் என்று சங்கங்கள் சொன்ன பிறகும் 78,500 ஊழியர்கள் விருப்ப ஓய்வில் சென்றிருக்கிறார்கள் என்றால் அது எதைக் காட்டுகிறது…? C.C.A அலுவலகத்திற்கு விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம் செல்வதில் பெரும் தேக்க நிலை நீடிக்கிற்து. 8700 ஊழியர்களில் 1300 ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம் மட்டுமே நேற்று வரை சென்றிருக்கிறது. பணி நிறைவு பெற்றுச் சென்றவர்களுக்கு மட்டுமே புரவிஷனல் பென்ஷன் கொடுக்கலாம் என்ற விதிமுறை இருக்கிறது. எனவே அட்ஹாக் பென்ஷன் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். அதற்கு ஒரு ஓய்வூதியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எப்படியாயினும் இது தொடர்பாக உத்திரவு விரைவில் டெல்லியிலிருந்து வெளியாகும் என்று உறுதியாக நம்புகிறோம்.
      விருப்ப ஓய்வு தொடர்பாக மத்திய அரசு முறையான உத்திரவாதத்தை எழுத்து வடிவில் கொடுத்திருக்கிறது. அதனை நீங்கள் அனைவரும் கண்டிப்பாக படித்திருப்பீர்கள். திருத்தப்பட்ட பட்ஜெட் எஸ்டிமேட் பாராளுமன்ற துணைக் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. எனவே சற்று தாமதாமானாலும் அரசின் உறுதிமொழி நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்புகிறோம்….

No comments:

Post a Comment